டாஸ்மாக் கடைகள் திறப்பு ஆய்வு கூட்டம் : சென்னை காவல் ஆணையர் நேரில் ஆய்வு

டாஸ்மாக் கடைகள் திறப்பு ஆய்வு கூட்டம் : சென்னை காவல் ஆணையர் நேரில் ஆய்வு
X
டாஸ்மாக் கடைகள் திறப்பு ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் சென்னை காவல் ஆணையர் டாஸ்மாக் கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்க பட உள்ள நிலையில் சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால் மற்றும் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் மற்றும் உயரதிகாரிகளுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சென்னை உட்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டதால், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால் உத்தரவின் படி பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் காவல் ஆணையரகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் எல். சுப்ரமணியன், காவல் அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கலந்தாய்வில் காவல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், மதுபானம் வங்க வருபவர்களை வரிசைப்படுத்துதல், முக கவசம் அணியாமல் வருபவருக்கு மதுபானம் வழங்க கூடாது , சமூக இடைவெளியை பின்பற்றுதல், ஒலிபெருக்கி ஏற்பாடுகள் ஆகியவை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

இதன் பின்னர், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் மற்றும் காவல் அதிகாரிகள் ஆகியோர் பெரியமெடு, எழும்பூர், மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் உள்ள சில டாஸ்மாக் கடைகளுக்கு நேரில் சென்று கட்டமைப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அங்குள்ள மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகளை வழங்கினர்.

Tags

Next Story