மத்தியஅரசிடம் தமிழக பாஜகவினர் தடுப்பூசியை பெற்றுத்தரவேண்டும்: அமைச்சர்
அமைச்சர் மாசுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது.
சென்னை ஓட்டேரியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர், அத்தியாவசிய பொருட்களை வாகங்னங்கள் மூலம் வீடு தேடி சென்று விற்பனை செய்யும் திட்டத்தை சென்னை ஓட்டேரியில் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் வடசென்னை எம்.பி. கலநிதி வீராசாமி, மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் 7500 நடமாடும் மளிகை பொருட்கள் விற்பனைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வரை 2197 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசியை இதுவரை 83லட்சம் பேர் செலுத்திக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவரின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது. தற்போது தமிழக அரசிடம் 5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.
கோவையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவிக்கிறார். அப்படி இல்லை. தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசிடம் இருந்து தமிழக பா.ஜ.க.வினர் பெற்றுத்தர வேண்டும். தடுப்பூசி செலுத்துவதில் திமுகவினர் தலையீடு எங்கேயும் இல்லை. அப்படி இருந்தால் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu