தமிழக ஏடிஎம் கொள்ளையர்கள் ஹரியானாவில் அதிரடி கைது

தமிழக ஏடிஎம்   கொள்ளையர்கள்  ஹரியானாவில்  அதிரடி கைது
X
சென்னை எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் ஹரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் சென்னை உள்பட 19 ஏடிஎம் மையங்களில் கொள்ளை தொடர்பாக அரியானா மாநிலம் மேவாக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்பட 19 ஏ.டி.எம் மையங்களில் கொள்ளை தொடர்பாக அரியானா மாநிலம் மேவாக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக சென்னை பெரியமேடு ஏடிஎம்மில் நூதனமான முறையில் ரூபாய் 16 லட்சம் கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து எஸ்.பி.ஐ ஏடிஎம் வழக்கு, மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடடைபெற்று வந்த நிலையில் அரியானா மேவாக்கில் குற்றாவாளிகள் அதிகம் இருக்கும் பகுதியில் வங்கி கொள்ளை தொடர்பாக முக்கிய நபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

மேலும் 3 பேர் கொண்ட கொள்ளை கும்பலுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!