பாலியல் புகாரில் தவறாக சஸ்பெண்ட் - நூலகருக்கு மீண்டும் பணி

பாலியல் புகாரில் தவறாக சஸ்பெண்ட் -   நூலகருக்கு மீண்டும் பணி
X

பைல் படம்

சேலம் மாவட்ட நூலகர் மீது, குற்றம் நிரூபிக்கப்படாததால் மீண்டும் பணி வழங்கி பொது நுாலக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்ட நூலக ஆணைக்குழுவில் மூன்றாம் நிலை நுாலகராக பணியாற்றி வந்த மணிவண்ணன். இவர் மீது கூறப்பட்ட பாலியல் புகார் காரணமாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

புகாருக்குள்ளான பணியாளர் விளக்கத்தை பரிசீலிக்காமல் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றாமல் 21.12.2020 ஆண்டில் தன்னிச்சையான முறையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நடத்தை விதிகள் தவறான விதிமுறையாக அதில் குறிப்பிட்டு ஆணை வழங்கப்பட்டு இருப்பதால் மேலும் விசாகா குழுவிடம் விரிவான விளக்கம் அளிக்க மறுக்கப்பட்டு இருப்பது தெரிவந்துள்ளது.

இருதரப்புகளிடம் நடத்திய விசாரணையில் காழ்புணர்வு காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விசாகா குழு உறுப்பினர்கள் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

ஆகையால் மணிவண்ணன் சஸ்பெண்ட் திரும்ப பெறப்பட்டு அவர் பணிபுரிந்த இடத்தை தவிர்த்து பிற இடங்களில் பணி வழங்க சேலம் மாவட்ட நுாலகருக்கு பொது நுாலக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
ai and business intelligence