மது போதையில் தீக்குளித்த பெண் சீரியஸ்

மது போதையில் தீக்குளித்த பெண் சீரியஸ்
X
கொடுங்கையூரில், மதுபோதையில் தீக்குளித்த பெண் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

சென்னை கொடுங்கையூர் சந்திரசேகர் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்( 55). இவர் கார்பென்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜானகி (52) கொடுங்கையூர் குப்பைமேடில், காகிதம் சேகரிக்கும் வேலை பார்த்து வருகிறார்.இவர்களுக்கு ஒரு மகளும், மூன்று மகன்களும் உள்ளனர்.

ஜானகிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது . நேற்றும் மது குடித்ததால், குடும்பத்தார் திட்டியுள்ளனர். இதனால், மதுபோதையில் இருந்த ஜானகி ஆத்திரமடைந்து, வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் ஊற்றிக் தீக்குளித்தார். ஆபத்தான நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
why is ai important to the future