கொடுங்கையூரில் போலீசாரை கடித்துக்குதறிய வழக்கறிஞர் கைது

கொடுங்கையூரில் போலீசாரை கடித்துக்குதறிய வழக்கறிஞர் கைது
X

கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார்.

சென்னை கொடுங்கையூரில் குடிபோதையில் போலீசாரை கடித்து குதறிய வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொடுங்கையூர் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் குடித்துவிட்டு மர்ம நபர் ஒருவர் தகராறில் ஈடுபடுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் அங்கு சென்ற கொடுங்கையூர் தலைமை காவலர் மாயக்கண்ணன் மற்றும் லோகநாதன் ஆகியோர் அங்கு குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட சுரேஷ்குமார் என்ற நபரை காவல் நிலையம் அழைத்து வர முற்பட்டனர். அப்போது அவர் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி இருவரையும் கையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் வண்ணாரப்பேட்டை மேயர் பாசுதேவ் 2வது சந்து பகுதியைச் சேர்ந்த சுரேஷ் கமார் வயது 29 என்பதும், மேலும் இவர் வழக்கறிஞராக இருப்பதாக தெரிவித்துள்ளார். குடிபோதையில் இருந்ததால் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய போலீசார் முற்பட்டபோது காவல்நிலையத்தில் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் இருந்த காவலர் பாபு என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரது கை விரல்களை கடித்து குதறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பாபுவை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காவல் நிலையத்திலேயே போலீசாரை வழக்கறிஞர் ஒருவர் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil