சென்னையில் ஆட்டோவை திருடிச்சென்ற நபரை கைது செய்த போலீஸார்

சென்னையில் ஆட்டோவை திருடிச்சென்ற  நபரை கைது செய்த போலீஸார்
X
வேலை இல்லாததால் ஆட்டோவை திருடிச் சென்று ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்த நபர் கைது

வேலை இல்லாததால் ஆட்டோவை திருடிச் சென்று ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி ஜி என் டி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்( 36 ) இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார் கடந்த ஆறாம் தேதி இரவு 10 மணிக்கு சவாரி முடித்துவிட்டு ஆட்டோவை தனது வீட்டின் முன்பு நிறுத்தி விட்டுச் சென்றார் மறுநாள் காலை வந்து பார்த்த போது ஆட்டோ காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதுகுறித்து ஆனந்த் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் ஆனந்த் நேற்று எழும்பூர் பகுதி அருகே தனது ஆட்டோவை வேறு ஒரு நபர் ஓடிச் செல்வதை பார்த்தார். உடனடியாக தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டோவை பிடித்து ஆட்டோ ஓட்டி வந்த நபரையும் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். கொடுங்கையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பிடிபட்ட நபர் மாதவரம் தபால் பெட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(35 )என்பதும் இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தது தெரிய வந்தது. தற்போது எந்த வேலையும் இல்லாத காரணத்தினால் சம்பவத்தன்று சாலையில் நின்று கொண்டிருந்த ஆட்டோவை திருடி சென்று தினமும் அதை சவாரி ஓட்டி பிழைப்பு நடத்தி வந்துள்ளார் இதனையடுத்து கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்..

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare