சென்னை: முதியவர் தலையில் கல்லை போட்டு கொன்ற நபர் கைது

சென்னை: முதியவர் தலையில் கல்லை போட்டு கொன்ற நபர் கைது
X

கைதான ஹேமந்த்

சென்னை பெரம்பூரில், பிளாட்பாரத்தில் தங்கியிருந்த முதியவர் தலையில் கல்லை போட்டு கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை மாதவரம் நெடுஞ்சாலை, கண்ணபிரான் தெரு சந்திப்பில் உள்ள, மாநகராட்சி கட்டண கழிப்பிடம் உள்ளது. அதன் அருகில் இருக்கும் பிளாட்பாரத்தில், முதியவர் ஒருவர், தலையில் பலத்த காயமுடன் இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், முதியவரின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.போலீசாரின் விசாரணையில், இறந்து கிடந்த முதியவர், ஓராண்டு காலமாக மாநகராட்சி கட்டண கழிப்பிடம் அருகே வசித்து வந்த மூர்த்தி, வயது 65 என்பதும், ஆதரவுவற்றவர் என்பதும் தெரியவந்தது.

மேலும், அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை, விசாரித்தபோது, அவர் ஆந்திர மாநில திருப்பதியை சேர்ந்த ஹேமந்த், வயது 29 என்பதும், சில மாதமாக முதியவருடன் தங்கி இருந்ததும் தெரிய வந்தது. முதியவரின் தலையில் கல்லை போட்டு கொன்றதும் அவர் தான் என்று தெரியவந்தது. ஹேமந்த், போரூரில் உள்ள மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று, அங்கிருந்து தப்பி வந்துள்ளார். ஹேமந்த்தை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் பற்றி விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!