பெரம்பலூர் வேலா கருணை இல்லத்துக்கு மளிகை பொருட்கள் வழங்கிய போலீஸ் எஸ்பி

பெரம்பலூர் வேலா கருணை இல்லத்துக்கு மளிகை பொருட்கள் வழங்கிய போலீஸ் எஸ்பி
X

பெரம்பலூர் மாவட்ட் போலீஸ் எஸ்.பி நிஷா பார்த்திபன் வேலா கருணை இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை கொரோனா நிவாரணமாக வழங்கினார்.

பெரம்பலூர் வேலா கருணை இல்லத்துக்கு ஒருமாதத்துக்கு தேவையான மளிகை பொருட்களை போலீஸ் எஸ்பி நிஷா பார்த்திபன் வழங்கினார். .

தமிழகம் முழுவதும் கடந்த 24ம் தேதி முதல் முழு உரடங்கு அமலாகியுள்ளது. இந்தநிலையில், ஏழை, எளிய மக்கள் மற்றும் ஆதரவற்றோரின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.

இந்நிலையில், பெரம்பலூா் வேலா கருணை இல்லத்தில் வசித்து வரும் ஆதரவற்ற 85 பேரின் பசியைப் போக்கும் வகையில், அவா்களுக்கு ஒரு மாதத்துக்கு உணவுத் தயாரிக்கத் தேவையான மளிகைப் பொருள்களை பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பார்த்திபன் நேரில் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவா் புவனேசுவரி, காவல் துணைக் கண்காணிப்பாளா் சரவணன் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு அறைக் காவல் ஆய்வாளா் ரஞ்சனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future