எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு: சென்னை காவல் ஆணையரிடம் புகார்

எடப்பாடி பழனிசாமி மீது  அவதூறு: சென்னை காவல் ஆணையரிடம்  புகார்
X

எடப்பாடி பழனிசாமி

முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு பரப்புவதாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக வழக்கறிஞர் அணியினர் புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குறித்து ஆதாரமற்ற தகவல்களை சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர். ஒரு தனியார் தொலைக்காட்சியில் வந்த தகவல் என கடந்த சில நாட்களாக ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

அதில், 'முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை என்ற தலைப்பில், நாங்கள் தாயில்லாத பிள்ளைகள்.எங்கள் மீது ஊழல் வழக்குகள் போடுவதை முதல்வர் ஸ்டாலின் தவிர்க்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

உண்மையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அப்படி எங்கேயும் கூறவில்லை. ஆனால், வேண்டுமென்றே திட்டமிட்டு இப்படி ஒரு அவதூறு தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அவதூறு கருத்துகளை பரப்பி வரும் நபர்களை கண்டுபிடித்து, அவர்கள் மீது தகவல் தொடர்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!