அஇஅதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவுக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் இரங்கல்

அஇஅதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவுக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் இரங்கல்
X

மதுசூதனன் மறைவு ஓபிஎஸ்- இபிஎஸ் இரங்கல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம்.

எம்ஜிஆரின் விசுவாசமிக்க தொண்டர், இயக்கத்தின் தொடக்க நாள் முதல் தன் விழிகளின் இமைகள் மூடும்வரை ஓயாது உழைத்த உடன்புறப்பு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய போர்ப்படைத் தளபதி. அதிமுக தொண்டர்களை எப்பொழுதும் தன் தோள்களில் வைத்துக் கொண்டாடிய, அதிமுக வேர்களில் ஒன்று பலவாறாகவும் மதுசூதனன் அவர்களைப் பற்றி வரலாறு சொல்லும். உண்மையிலேயே அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் அனைவராலும் "அஞ்சா நெஞ்சன்" என்று கம்பீரத்தோடு அழைக்கப்பட்ட மதுசூதனன் 70 ஆண்டுகள் எம்ஜிஆர் புகழ்பாடி, அதிமுக வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்.

மதுசூதணை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உற்றார் உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும், ஒன்றரைக் கோடி கழகத் தொண்டர்களின் சார்பிலும், எங்கள் சார்பிலும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

மதுசூதனன் அவர்களின் மறைவையொட்டி மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். அதே போல், தமிழகம் மற்றும் அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும், கட்சி கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதையும் அனைத்து நிகழ்ச்சிகளும் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!