வாகன ஓட்டிகள் உஷார், விதியை மீறினால் இனி செல் எண்ணிற்கே வரும் அபராதம் : சென்னை காவல் ஆணையர்

வாகன ஓட்டிகள் உஷார், விதியை மீறினால் இனி செல் எண்ணிற்கே வரும்  அபராதம் : சென்னை காவல் ஆணையர்
X

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜூவால்

அண்ணாநகர் உள்ளிட்ட முக்கிய 5 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலம், சிக்னல்களில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் செல்லிடப்பேசிக்கு தானியங்கி மூலம் அபராதம் விதிக்கும் முறையை சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை: அண்ணாநகர் உள்ளிட்ட முக்கிய 5 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலம், சிக்னல்களில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் செல்லிடப் பேசிக்கு கணினி தானியங்கி புரோகிராம் மூலம் விதிமீறல் தொடர்பான போக்குவரத்து செலான்களை அனுப்பும் முறையை சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜூவால் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னையில் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு, தானியங்கி புரோகிராம் மூலம், செல்லான் அனுப்பும் திட்டம் முதல் முறையாக அண்ணாநகர் உள்ளிட்ட 5 இடங்களில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், இதுவரை வாகன எண்களைக் கொண்டு தானியங்கி முறையில் அந்த வாகனத்தின் உரிமையாளரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு அபராதத்துக்கான செல்லான் அனுப்புவதில் இருந்த சிக்கல் நீக்கப்பட்டுள்ளது.

எனவே,பொதுமக்கள் இனிவரும் காலங்களில் சாலை விதிகளை மதித்து வாகனத்தை இயக்க காவல் துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்