59 பேருக்கு வீடுகள் வழங்கிய எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன்

59 பேருக்கு வீடுகள் வழங்கிய எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன்
X

சேத்துப்பட்டு ஜெகந்நாதபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சேகர்பாபு

நடைபாதையில் வசித்து வந்த 59 குடும்பங்களுக்கு எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் வீடுகளை வழங்கினார்

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை சாஸ்திரி நகரில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு விழாவும்.., அதேபோல் 3.41 கோடி மதிப்பீட்டில் சேத்துப்பட்டு ஜெகந்நாதபுரத்தில் மாநகர ஆரம்ப சுகாதார மையக் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேபோல் எழும்பூர் ரயில் நிலையம் அருகில் காந்தி இரவில் சாலை நடைபாதையில் வசித்து வந்த 59 குடும்பங்களுக்கு எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் வீடுகளை வழங்கினார். வீடு பெற்ற குடும்பத்தினர்கள் நடனமாடி எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமனை வரவேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!