தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா: ஒரேநாளில் 7 ஆயிரத்தை நெருங்கிய தொற்று

தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா: ஒரேநாளில் 7 ஆயிரத்தை நெருங்கிய தொற்று
X
இன்றைய பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டி பதிவாக அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது

தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா ஒரேநாளில் 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 4,862 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டி பதிவாக அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,983 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,67,432 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 27,07,779 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 721 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 11 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,825 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று மேலும் 3,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 5,73,048 ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கல்பட்டில் 816 பேருக்கும், திருவள்ளூரில் 444 பேருக்கும், கோவையில் இன்று மேலும் 309 பேருக்கும், ஈரோட்டில் 47 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 5,81,03,351 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,28,736 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 22,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்