சென்னையில் இன்று புதிதாக 439 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று புதிதாக 439 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

சென்னையில் இன்று புதிதாக 439 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாயின. அதில், தமிழகத்தில் இன்று 7,427 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 24,29,924 உள்ளது. அதிகபட்ச பாதிப்பாக தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 439 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 5,29,650 உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 15,281 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 23,37,209 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை 61,329 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மேலும் 189 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு 31,386 ஆக அதிகரித்துள்ளது.

Tags

Next Story