முடிந்தது புரட்டாசி: களை கட்டிய காசிமேடு மீன் மார்க்கெட்

X
மீண்டும் களை கட்டிய காசிமேடு மீன் மார்க்கெட்
By - C.Pandi, Reporter |18 Oct 2021 5:39 PM IST
புரட்டாசி மாத நிறைவையொட்டி சென்னை காசிமேடு மீன் சந்தையில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தினமும் 200 டன் மீன் விற்பனைக்கு வருகிறது. இங்குள்ள மீன் சந்தையில் ஞாயிறு தோறும் அசைவ பிரியர்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக புரட்டாசி மாத சனிக் கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்ததால் மீன் மற்றும் இறைச்சி விற்பனை மிகவும் சரிவு நிலையில் காணப்பட்டது.
இந்நிலையில், நேற்றோடு புரட்டாசி முடிந்ததால், சென்னை காசிமேடு மீன் மார்க்கெட் மீண்டும் களை கட்டியது. காசிமேடு மீன் சந்தையில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu