கொரோனா வார்டில் தற்கொலை செய்த நோயாளி!

கொரோனா வார்டில் தற்கொலை செய்த நோயாளி!
X
சென்னையில் அதிர்ச்சி

சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா நோயாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கேளம்பாக்கத்தை சேர்ந்த ரங்கன் என்பவருக்கு சில நாட்கள் முன்னதாக கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவில் யாரும் கவனிக்காத நேரத்தில் கொரோனா வார்டில் உள்ள ஜன்னல் ஒன்றில் ரங்கன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!