பாரீஸ் டூ சென்னை நேரடி விமானசேவையை ஏா் பிரான்ஸ் ஏா் லைன்ஸ் இன்று தொடங்கியது

பாரீஸ் டூ சென்னை நேரடி விமானசேவையை  ஏா் பிரான்ஸ்  ஏா் லைன்ஸ் இன்று தொடங்கியது
X

பாரீசிலிருந்து சென்னைக்கு வந்த ஏர்பிரான்ஸ் ஏர்லைன்ஸ்  விமானம்.

பாரீஸ் டூ சென்னை நேரடி விமானை சேயையை ஏர் பிரான்ஸ் ஏர்லைன்ஸ் இன்று தொடங்கியது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகா் பாரீசிலிருந்து சென்னைக்கு ஏா்பிரான்ஸ் ஏா்லைன்ஸ்சின் புதிய விமான சேவை தொடங்கியுள்ளது.

பாரீஸ்சில் உள்ள சாா்லஸ் டி கோலே விமானநிலையத்திலிருந்து நேற்று காலை 10.25 மணிக்கு 111 பயணிகள்,19 விமான ஊழியா்களுடன் புறப்பட்ட ஏா்பிரான்ஸ் போயீங் ரக விமானம் நேற்று நள்ளிரவு 12.25 மணிக்கு சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்தது.

இந்தியா மற்றும் பிரான்ஸ் தேசிய கொடிகளுடன் வந்து தரையிறங்கிய விமானத்தை சென்னை விமானநிலையத்தில் விமானநிலைய அதிகாரிகள் வரவேற்றனா்.விமானிகள்,விமான பணிப்பெண்கள்,விமான பொறியாளா்கள் அனைவருக்கும் மலா்மாலைகள் அணிவித்து,பூங்கொத்து கொடுத்து அன்புடன் வரவேற்கபட்டனர்.

அதன்பின்பு விமான ஊழியா்கள் அனைவரும் ஓய்வுக்காக சென்னை நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றனா்.நாளை அதிகாலை 1.20 மணிக்கு இந்த விமானம் மீண்டும் சென்னையிலிருந்து பாரீஸ் புறப்பட்டு செல்கிறது.இது சென்னை-பாரீஸ் இடையே இயக்கப்படும் வாராந்திர புதிய பயணிகள் விமானமாகும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!