தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: டெல்டா மாவட்டங்களில் கனமழை

தென்மேற்கு வங்கக்கடலில்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: டெல்டா மாவட்டங்களில் கனமழை
X

பைல் படம்

தென்மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்

தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானில ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெருமபாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

3.10.2021: மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெருமபாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

4.10.2021 : தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சேலம், தருமபுரி, ஈரோடு, கோயம்புத்தூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெருமபாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்

5.10.2021 & 6.10.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): விழுப்புரம் (விழுப்புரம்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி) 8 தலா . மண்டபம் (ராமநாதபுரம்), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்)தலா 7 .மோகனூர் (நாமக்கல்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), முசிறி (திருச்சி )தலா 6 . மாயனூர் (கரூர்), திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), பாம்பன் (ராமநாதபுரம்), மைலம் (விழுப்புரம்), வேப்பூர் (கூடலூ)தலா 5. கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), ஊத்துக்குளி (திருப்பூர்), பொள்ளாச்சி (கோவை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), ராசிபுரம் (நாமக்கல்), அவிநாசி (திருப்பூர்) தலா4 .

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

2.10.2021: இலங்கை கடற்கரைக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதி, மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் .

Tags

Next Story
Will AI Replace Web Developers