விஷம் போல் ஏறும் விலைவாசியைக் கட்டுப்படுத்த ஓபிஎஸ் வலியுறுத்தல்
பைல் படம்
தமிழ்நாட்டில் கடந்த சில நாளாக விஷம் போல் ஏறி கொண்டே செல்லும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. பண்டிகை காலம் என்பதாலும் தொடர் மழை காரணமாக விளைச்சல் வரத்து குறைவாக உள்ளதாலும் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை விஷம் போல் ஏறி கொண்டே செல்கிறது.
அன்றாடம் சமையலுக்கு தேவையான எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் உளுத்தம் பருப்பின் விலை கிலோவுக்கு 22 ரூபாயில் அதிகரித்துள்ளதாகவும், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றின் விலை 10 முதல் 15 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும், எண்ணெய் வகைகளின் உயர்வும் பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும், இதர மளிகை பொருட்கள் பூண்டு, புளி, கடுகு ஆகியவற்றின் விலையும் ரூபாய் 10 முதல் 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது.
எனவே, தமிழக முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி விஷம் போல் ஏறி கொண்டே செல்லும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu