காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய ஓய்வு - டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு

காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய ஓய்வு - டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு
X
தமிழகத்தில் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

மன அழுத்தம், பணிச்சுமை காரணமாக காவலர்கள் தற்கொலை செய்து கொள்வது தற்போது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. தொடர் பணிச்சுமை காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு காவலர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர்களின் உடல்நலம் மற்றும் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிட வாரம் ஒரு முறை விடுமுறை அளிக்க தமிழக காவல்துறையின் முடிவெடுத்தது. அவர்களுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்புகள் அனைத்தும் மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பி தவறாமல் செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகைநேர ஊதியம் வழங்கப்படல் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் காவல் துறையின் சார்பாக பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துச் செய்தி, மாவட்ட மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக, சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது சுற்றிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா