குறிப்பிட்ட நாளுக்குள் சொத்துவரி கட்டினால் ஊக்கத்தொகை : சென்னை மாநகராட்சி

குறிப்பிட்ட நாளுக்குள் சொத்துவரி கட்டினால் ஊக்கத்தொகை : சென்னை மாநகராட்சி
X

பைல் படம்

ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 தினங்களுக்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5,000 வழங்கப்படும்

சென்னை மாநகராட்சிக்கு ஒவ்வொரு குறிப்பிட்ட அரையாண்டின் முதல் 15 தினங்களுக்குள் சொத்து வரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5,000 வழங்கப்படும் இல்லை என்றால் தனி வட்டி விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு நடப்பு 2ஆம் அரையாண்டிற்குரிய சொத்து வரியை, அரையாண்டு காலம் தொடங்குவதற்கு முன்பாகவே செப்.30க்குள் 4,01,260 சொத்து உரிமையாளர்களும் 2ஆம் அரையாண்டு காலம் தொடங்கிய தேதி முதல் அதாவது அக்டோபர் 1 முதல் 10ஆம் தேதி வரையில் 1,37,760 சொத்து உரிமையாளர்களும் செலுத்தியுள்ளனர்.

அக்டோபர் மாதம் 15ஆம் தேதிக்குப் பிறகு செலுத்தப்படும் சொத்துவரித் தொகைக்குக் கூடுதலாக 2 சதவீதம் தனி வட்டியுடன் சேர்த்துச் செலுத்த வேண்டும். எனவே, சொத்து உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய இரண்டாம் அரையாண்டுக்குரிய சொத்து வரியை இன்று (15.10.2021) செலுத்தி ஊக்கத்தொகையைப் பெற்றுப் பயனடையலாம். 15ஆம் தேதிக்குப் பிறகு தனி வட்டியுடன் சொத்து வரி செலுத்துவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil