ஓபிசி பட்டியலில் திருநங்கைகளை சேர்க்க மத்திய அரசு முடிவு

ஓபிசி பட்டியலில் திருநங்கைகளை சேர்க்க மத்திய அரசு முடிவு
X
திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இட ஒதுக்கீடு பெற ஏதுவாக, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (ஓ.பி.சி.) 3 ஆம் பாலினத்தவர்களான திருநங்கைகளை சேர்க்க மத்திய சமூக நீதித்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, மத்திய சமூக நீதித்துறை ஓபிசி பட்டியலில் திருநங்கைகளை சேர்ப்பதற்கான வரைவு அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பில் ஓபிசி பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீட்டின் கீழ் திருநங்கைகள் பயனடையும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்