மனம் உடைந்து போயிருக்கும் ஓ.பி.எஸ்.!

மனம் உடைந்து போயிருக்கும் ஓ.பி.எஸ்.!
எப்படியும் வெற்றி பெற்று விடுவார் என்று கணிக்கப்பட்டுள்ள ஓ.பி.எஸ்., மனம் உடைந்து போயிருக்கிறாராம்.

தேர்தலில் போட்டியிடவே மாட்டேன் என அடம் பிடித்து வந்த ஓ.பி.எஸ்., ஒரு வழியாக ராமனாதபுரம் தொகுதியில் தான் போட்டியிடுவதாக அறிவித்தார். அதுவும் சுயேச்சை சின்னத்தில் களம் இறங்குவதாக அறிவித்தார். இதற்கு போட்டியாக மேலும் நான்கு ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்ட வேட்பாளர்களை சுயேச்சை சின்னத்தில் எதிர்தரப்பினர் களம் இறக்கினர். இதனால் ராமனாதபுரம் தொகுதி தேர்தல் களம் ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாக இருந்தது.

என்ன தான் போட்டிகள் இருந்தாலும் ராமனாதபுரம் தொகுதியி்ல் போட்டியிட்ட ஓ.பி.எஸ்., சமுதாய ரீதியான ஒருங்கிணைப்பு, ஆளும் தரப்பின் உள்ளடி வேலைகள், பரிதாப அலை போன்ற காரணங்களால் எப்படியும் வெற்றி பெற்று விடுவார் என மத்திய அரசு உறுதியாக நம்புகிறதாம். ஆனால் அந்த நம்பிக்கை ஓ.பி.எஸ்.,க்கு இல்லை என்று கட்சியினர் சொல்கின்றனர். மத்திய உளவுத்துறை என்ன தான் ஆறுதல் கொடுத்தாலும், ஓ.பி.எஸ்., ஒருவித திகிலான மனநிலையுடன் தான் காணப்படுகிறாராம்.

அதற்கு காரணம், கடைசி நேரத்தில் சுவீட் பாக்ஸ்களை விநியோகிக்க மிகவும் நம்பகமான நபர்களை தான் நியமித்து இருந்தாராம் ஓ.பி.எஸ்., அந்த நம்பகமான நபர்களே ஏமாற்றி விட்டனராம். சுவீட்பாக்ஸ்கள் முறையாக வாக்காளர்களுக்கு சென்று சேரவில்லையாம். இந்த நிலையில் தனக்கு தேர்தல் வேலை பார்த்தவர்களே இப்படி வெளிப்படையாக உள்ளடி வேலைகள் பார்த்துள்ள நிலையில் எப்படி தேர்தல் முடிவுகளை நான் நம்புவது என ஓ.பி.எஸ்., தனக்கு நம்பகமான நபர்களிடம் கேள்வி எழுப்பி வருகிறாராம். அதற்கு அவர்கள் அண்ணே... கவலைப்படாதீங்க... நீங்க கட்டாயம் ஜெயிப்பீங்க என பல்வேறு காரணங்களை கூறி ஆறுதல்படுத்தி வருகின்றனராம்.

Tags

Next Story