தமிழகத்தில் மறுவாக்கு எண்ணிக்கை அவசியம் இல்லை -சத்ய பிரதா சாஹு

தமிழகத்தில் மறுவாக்கு எண்ணிக்கை அவசியம் இல்லை -சத்ய பிரதா சாஹு
X

தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களைப் பிடித்துள்ளது. ஒரு கட்சி ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் திமுக மட்டும் 125 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சர் ஆகிறார். இந்நிலையில் மறு வாக்கு எண்ணிக்கை எந்த தொகுதியிலும், எந்த கட்சியும் கோரவில்லை என்பதால் மறு வாக்கு எண்ணிக்கை தேவையில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!