மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண கட்டணம் கிடையாது: கோயில்களில் அறிவிப்பு பலகை

மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண கட்டணம் கிடையாது:  கோயில்களில்  அறிவிப்பு பலகை
X

அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு

மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படாது

மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண கட்டணம் கிடையாது அனைத்து கோயில்களிலும் அறிவிப்பு பலகை வைக்கப்படுகிறது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் இது தொடர்பாக அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமென உத்தரவிட்டார். அதன் பேரில், அனைத்து கோயில்களிலும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரால் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின், கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்கிற விவரம் தெரிவித்து கொள்ளப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
why is ai important to the future