இன்னும் ஓராண்டுக்கு மேல் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை
ஏரிகளில் நீர் வரத்து அதிகரிப்பால் சென்னை மக்களுக்கு கூடுதல் குடிநீர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் உள்ளிட்ட நீர்தேக்கங்களில் போதிய அளவுக்கு நீர் இருப்பு உள்ளதால் இன்னும் ஓராண்டுக்கு மேல் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் தாராளமாக சென்னை மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீர் நிலைகளில் 9 ஆயிரத்து 372 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், 80 சதவீதம் அளக்கு நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் உள்ளிட்ட நீர்தேக்கங்களில் போதிய அளவுக்கு நீர் இருப்பு உள்ளதால் இன்னும் ஓராண்டுக்கு மேல் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் தாராளமாக சென்னை மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் அடுத்த 15 மாதங்களுக்கு தங்குதடையின்றி சென்னை மக்களுக்கு குடிநீர் சப்ளை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 745 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்பட்டுள்ள நிலையில் அது நேற்று 780.52 மில்லியன் லிட்டராக அதிகரித்துள்ளது.
இவ்வளவு அளவுக்கு போதுமான குடிநீர் சப்ளை செய்யப்படுவதன் மூலம் குடிநீர் சப்ளையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் சென்னை மக்களுக்கு 1,000 மில்லியன் லிட்டர் அளவுக்கு குடிநீரை சப்ளை செய்யும் நிலை ஏற்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் 9 ஆயிரத்து 372 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், 80 சதவீதம் அளக்கு நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தண்ணீர் லாரிகள் மூலமும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த லாரிகள் மூலம் சப்ளை செய்யப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu