ஊழியர்களுக்கு கொரோனா சரவணா ஸ்டோர்ஸ் கடை மூடப்பட்டது

ஊழியர்களுக்கு கொரோனா சரவணா ஸ்டோர்ஸ் கடை மூடப்பட்டது
X
சென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸின் 39 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடை மூடப்பட்டது

சென்னை புரசைவாக்கம் கரியப்பா தெருவிலுள்ள சரவணா ஸ்டோர்ஸின் பணியில் உள்ள 39 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கடை மூடப்பட்டு சாலை முழுவதும் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: "தங்குமிடத்திலிருந்து தான் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், தங்குமிடமும், கடையும் ஒரே கட்டடத்தில் இருப்பதால் கடையும் மூடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை 166 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதில் 13 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. சனிக்கிழமை எடுக்கப்பட்ட 159 மாதிரிகளில் 26 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது. அனைத்து ஊழியர்களும் இளைஞர்களாக இருக்கின்றனர். சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. இருப்பினும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil