தமிழகத்தில் மே 6 முதல் 20 வரை புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது

தமிழகத்தில் மே 6 முதல் 20 வரை புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது
X
தமிழகத்தில் மே 6 முதல் 20 வரை புதிய கட்டுப்பாடுகள்..நாளை காலை 4 மணி முதல் அமலுக்கு வருகிறது

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 6 முதல் 20 வரை புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு நேற்று அறிவித்தது. இப் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் 15 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும்

50% அரசு ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர வேண்டும். மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரவேண்டிய கட்டாயமில்லை. சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு நாளை முதல் 20ஆம் தேதி வரை அனுமதி இல்லை.

முன்களப் பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள், வழக்கறிஞர்களுக்கு புறநகர் ரயில்களில் அனுமதி மத்திய, மாநில அரசு ஊழியர்கள், உயர்நீதிமன்ற ஊழியர்கள், ஊடகத்துறையினருக்கு ரயில்களில் பயணிக்க அனுமதி. இந்த கட்டுப்பாடுகள் நாளை காலை 4மணி முதல் அமலுக்கு வருகிறது.




Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!