சங்கரநேத்ராலயா மருத்துவமனையின் புதிய கட்டிடம்: காணொலி மூலமாக முதல்வர் திறந்தார்

சங்கரநேத்ராலயா மருத்துவமனையின் புதிய கட்டிடம்: காணொலி மூலமாக முதல்வர் திறந்தார்
X

காணொலி மூலம் சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை  முதல்வர் மு.க.ஸ்டாலின்  திறந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில், சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் 43-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஆலந்தூரில் உள்ள ஜஸ்லோக் கட்டணமில்லா சிகிச்சை சமூக கண் மையத்தின் புதிய கட்டடம் மற்றும் இராஜா அண்ணாமலைபுரம் பிரிவு விரிவாக்கக் கட்டடம் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின்போது, சங்கர நேத்ராலயாவின் நிர்வாக ஆட்சிக்குழுத் தலைவர் டாக்டர் கிரிஷ் ஷிவா ராவ், துணைத் தலைவர் டாக்டர் டி.எஸ்.சுரேந்திரன், செயலாளர் ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare