தூய்மைப் பணியாளர் இறந்தால் அரசுகளே பொறுப்பு-தேசிய மனித உரிமை ஆணையம்

தூய்மைப் பணியாளர் இறந்தால் அரசுகளே பொறுப்பு-தேசிய மனித உரிமை ஆணையம்
X
தூய்மைப் பணியாளர் இறந்தால் மத்திய மாநில அரசுகளே பொறுப்பு ஏற்கவேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

நச்சுத்தன்மை வாய்ந்த குப்பைகள் மற்றும் மனிதக் கழிவுகளை அள்ளும் தூய்மைப் பணியாளர்களின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், தூய்மைப் பணியாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அருண் குமார் மிஸ்ரா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் மனிதக் கழிவுகளை அள்ளும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் அல்லது ஒப்பந்ததாரர்கள் மரணிக்க நேர்ந்தால் அவர்களது மரணத்திற்கு மத்திய ,மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.

மனிதக் கழிவுகளை அள்ளுதல், அல்லது நச்சுத்தன்மை வாய்ந்த குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும்போது அவர்களுக்குத் தேவையான கையுறைகள், தலைக்கவசம், ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்டவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை மத்திய அமைச்சரவையின் அனைத்துத் துறைகளுக்கும், மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil