ரூ. 5 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கிய நளினி!

ரூ. 5 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கிய  நளினி!
X

நளினி

ராஜீவ் கொலை குற்றவாளி நளினி, கொரோனா நிவாரண நிதியாக ரூ. 5 ஆயிரத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் தடுக்கும் பணிகளுக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளிக்க முன்வந்துள்ளார்.

இது தொடர்பாகப் பெண்கள் தனிச்சிறை அதிகாரிகளிடம் நளினி, இன்று (மே-18) அளித்துள்ள மனுவில் ''தனது சிறைவாசி வைப்பு நிதியில் இருந்து ரூ.5 ஆயிரம் பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க அனுமதிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரது வைப்பு நிதித் தொகை குறித்தும் அவரது விருப்பத்தின் பேரில் அதில் இருந்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்க சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி விரைவில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அந்தப் பணம் அனுப்பப்படும்'' என்று தெரிவித்தனர்.

Tags

Next Story