3 மாதங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவோம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

தமிழகம் முழுவதும் கோயில் நிலங்களில் வரும் 3 மாதங்களில் 1 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாவது நினைவு தினமான கடந்த 7-ஆம் தேதி ஒரு லட்சம் மரக்கன்றுகளை கோயில் நிலத்தில் நடும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் அந்த திட்டத்தின் செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர்கள் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பில் மேலும் கூறியதாவது.
கடந்த 7 - ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மரக்கன்றை நட்டு வைத்தார்.இந்துசமய அறநிலைத் துறை அலுவலகத்திற்கு முதல்வர் வருவது இதுவே முதல் முறை என்றார்.
கலைஞர் பிறந்த நாள் மரக்கன்றுகள் திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் மரக்கன்றுகளை தமிழகம் முழுவதும் உள்ள கோவில் நிலங்களில் மூன்று மாதங்களில் நட்டு வளர்க்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
மரங்களை தேர்வு செய்வதில் வனத்துறையிடம் இணைந்து அந்தந்த மண் சார்ந்த மரங்களை தேர்வு செய்து அறநிலைத்துறை கீழ் உள்ள கோயில்களில் கள ஆய்வு செய்து இடத்திற்கு தகுந்தவாறு மரங்கள் நடப்படும்,
தமிழக அரசின் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தும் இடங்களில் வனத்துறைக்கு சம்பந்தமான மரங்கள் இருக்குமாயின், மரங்களின் ஆயுட்கால அடிப்படையில் அதற்கு உண்டான இழப்பீடு வழங்கப்படும். இது தொடர்பாக அரசாணை இல்லாத பட்சத்தில் இது தொடர்பாக ஆய்வு செய்து விவசாயிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.பட்டா இல்லாத நிலப்பரப்பு ஆக்கிரமிப்பாக கருதி அகற்றப்படும் என்றார் அமைச்சர் சேகர் பாபு.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu