உதயநிதி சூறாவளியாகசுழன்று செயல்படுகிறார்:தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி

உதயநிதி சூறாவளியாகசுழன்று செயல்படுகிறார்:தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி
X

தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி செய்தியாளர்களுக்கு பேட்டிஅளித்த போது.

சென்னை முழுவதும் உதயநிதி ஸ்டாலின் சூறாவளியாக சுழன்று செயல்படுவதாக தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி பெருமிதத்துடன் கூறினார்.

சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையிலுள்ள உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் தாய்வான் நாட்டை மையமாக கொண்ட திசூசி பவுண்டேஷன் மூலமாக கோவையை சேர்ந்த எஸ்எம் கார்ப்ரேஷன் நிறுவனம், தமிழக அரசுக்கு உதவும் வகையில் 400 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கவுள்ளனர்.

முதற்கட்டமாக 100 ஆக்சிஜன் செறிவூட்டிகளை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியிடம் வழங்கினர். மீதமுள்ள 300 செறிவூட்டிகள் நேரடியாக திசூசி பவுண்டேசன் மூலம் தைவானிலிருந்து தமிழ்நாடு மருத்துவக்கழகத்திற்கு நேரடியாக வழங்கப்படுகிறது. பின்னர் இவை தேவைக்கேற்ப பல்வேறு அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது..

இதுபற்றி தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழக முதல்வர் தடுப்பூசி முகாம்களை அமைப்பது, ஆக்சிஜன் படுக்கைகள அதிகரிப்பதில் முனைப்போடு செயல்படுகிறார். எம்.பி, எம்.எல்.ஏ க்களையும் இதனை செய்யுமாறு கூறியிருந்தார்.

இன்று எஸ்.எம். கார்ப்ரேஷன் சார்பில் 100ஆக்சிஜன் செறிவூட்டிகளை முதற்கட்டாமாக சூறாவளியாக சுழன்று செயல்படும் சகோதர் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினிடன் வழங்கியுள்ளார்கள். அடுத்தக்கட்டமாக 200 மூன்றாம் கட்டமாக 100 என ஆக்சஜன் செறிவூட்டிகளை வழங்க உள்ளார்..

தன்னுடய தொகுதிமட்டுமல்லாமல் சென்னை முழுவதுமே சிறப்பாக பணிகளை செய்து வரும் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியுள்ளது பெருமைக்குறிய ஒன்றாகும் என்றார்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்