இந்திய கூட்டாட்சி நெறிமுறைகளை இன்றைய நிலைக்கு ஏற்ப மோடிஅரசு பயன்படுத்துகிறது
இந்திய கூட்டாட்சி நெறிமுறைகளை இன்றைய நிலைக்கு ஏற்ப மோடி அரசு பயன்படுத்தி வருகிறது மோடி அரசு என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி ராஜா.
சென்னை தி நகரில் உள்ள பாலன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: உலகம் கண்டிராத தொற்றுநோய் கொரோனா மற்றும் ஒமைக்ரான் என்று மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் நீங்கள் அனைவரும் பாதுகாப்பு இருக்க வேண்டும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும்.
மோடி தலைமையில் அமைந்திருக்கும் ஆட்சி கூட்டாட்சி நடைமுறைகளை தகர்த்து வருகிறது. பாஜக உடன் ஆர்எஸ்எஸ் இருந்து கொண்டு மதச்சார்பின்மையை கொள்கையை கெடுத்து வருகிறது. இந்திய அரசியல் சட்டத்தை மத்திய அரசு இன்றைக்கு தவிர்த்து வருகிறது. இந்தியாவில் இதுவரை ஏற்றிருந்த கூட்டாட்சி நடைமுறைகள் எல்லாம் தகர்த்து வருகிறது.
மத்திய அரசு மாநில உரிமைகளை தகர்த்து வருகிறது. மாநில உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் செயல்படுகிறது அதற்கு பல்வேறு உதாரணங்கள் இருக்கிறது. வேளாண் சட்டம் ,புதிய கல்விக் கொள்கை அவர்கள் விரும்பிய கல்விக் கொள்கையை திணித்து வருகிறார்கள்.பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கபடுகிறது.பொதுத்துறை மக்களுடைய சொத்துக்களை தனியார் மயமாக்குவது இது கடும் கண்டனத்துக்குரியது. இதை என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது.மாநில அரசுகளின் கருத்துகளை கேட்காமல் மத்திய அரசு தனியாக முடிவுகளை எடுத்து வருகிறது
நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் மற்றும் வேறு பிற மாநிலங்களில் நடைபெறவில்லை ஆளுநர்களை அரசுக்கு சாதகமாக செயல்பட வேண்டுமென மத்திய அரசு நினைக்கின்றனர்.இந்திய கூட்டாட்சி நெறிமுறைகளை இன்றைய நிலைக்கு ஏற்ப மோடி அரசு பயன்படுத்தி வருகிறது மோடி அரசு விலக்கப்பட வேண்டும்.தொழிலாளர்களுக்கு எதிராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது
இந்தியாவை காப்பாற்ற வேண்டும் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் இன்றைக்கு மோடி அரசு அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்கிற முடிவில் இறங்கியுள்ளது. நடைபெற உள்ள ஐந்து மாநிலத் தேர்தல்கள் இதை உறுதி செய்யும். மக்கள் மனநிலை மோடி அரசுக்கு எதிராக திரும்பியுள்ளது அது அகில இந்திய அளவில் மக்களின் மனநிலையை உருவாக்கி வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மோடி அரசை அகற்ற படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது அகில இந்திய மாநாடு அக்டோபர் மாதம் ஆந்திரா விஜயவாடாவில் நடைபெற உள்ளது. அதனின் தயாரிப்பு முன்னேற்பாடுகள் குறித்து வருகின்ற நாட்களில் கோவையில் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட உள்ளோம்.பஞ்சாப் விவசாயிகள் மோடி அரசுக்கு எதிராக கடும் கோபத்தில் இருக்கிறார்கள் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் பஞ்சாப் மாநில விவசாயிகளுக்கு ஒரு பெரும் பங்கு இருக்கிறது. மத்திய அரசு விவசாயிகள் சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள்
மோடி பிரதமர் என்கிற வகையில் அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்களின் பயண திட்டத்தில் மாற்றம் செய்கிறது. இதை யார் செய்தார்கள். எதற்கு செய்தார்கள் என உள்துறை அமைச்சர் தான் விளக்க வேண்டும். பஞ்சாபில் எதிர்ப்பு இருந்து வருகிறது. அவர்களின் மாநில உரிமை.அதற்கு எதிராக பஞ்சப் விவசாயிகளை அவர்களை குறை சொல்வது அவர்களை சிறுமைப் படுத்துவது ஏற்றுக்கொள்ளப்படாது என்றார் டி.ராஜா.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu