பிளஸ் 2 தேர்வு குறித்து 2 நாட்களில் முடிவு: அமைச்சர் அறிவிப்பு!

பிளஸ் 2 தேர்வு குறித்து 2 நாட்களில் முடிவு: அமைச்சர் அறிவிப்பு!
X

அமைச்சர் அன்பில் மகேஷ்.

சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனால், தமிழகத்திலும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்தாகுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், மாணவர்களின் உடல்நலம், பாதுகாப்பு முக்கியம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளளார்.

தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்ட பின் இன்னும் இரண்டு நாட்களில் முடிவுகள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

14417 என்கிற உதவி எண்&tnschoolsedu21@gmail.com என்கிற இணையதள முகவரியிலும் மாணவர்கள் பெற்றோர்கள் கல்வியாளர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து கருத்துக்களை பதிவு செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு செய்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!