சன் குழுமம் ரூ.10 கோடி கொரோனா நிவாரண நிதி...!

சன் குழுமம்  ரூ.10 கோடி கொரோனா நிவாரண நிதி...!
X

 சன் குழுமத்தின் சார்பாக கலாநிதி மாறன், தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கியபோது.

சன் குழுமம் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடன் கலாநிதிமாறன் வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு நிவாரண பணிகளுக்கும் பெருமளவில் நிதி தேவைப்படுகிறது. இதனைத் தொடர்ந்து முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் நிவாரண நிதிகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் சன் குழுமத்தின் சார்பாக கலாநிதி மாறன் தனது மனைவி காவேரியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலினின் இல்லத்திற்கு சென்று நிவாரண நிதிக்காக 10 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளார். அப்பொழுது அவரது மனைவி துர்காவும் உடன் இருந்துள்ளார்.

இந்த சந்திப்பை சன் குழுமம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai future project