சென்னையில் பெய்த திடீா் மழையால் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு
பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள்
செனனையில் பெய்த திடீா் பெருமழையால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு விமான பயணிகள், விமானிகள் உட்பட விமான ஊழியா்கள் தாமதமாக விமான நிலையத்திற்கு வந்ததால் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய 7 சா்வதேச விமானங்கள் உட்பட 20 விமானங்கள் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு செல்லும் நிலை ஏற்பட்டது.
சென்னை புறநகா் பகுதிகளில் நேற்று மாலையிலிருந்து நள்ளிரவு வரை டிசம்பா் மாதக்கடைசி நாளில் பெய்த வரலாறு காணாத பெருமழை காரணமாக சென்னை மற்றும் புறநகா் பகுதிகள் முழுவதும் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.இதனால் சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன.
இதனால் சென்னை விமானநிலையத்திற்கு விமானத்தில் பயணிக்க வந்து கொண்டிருந்த பயணிகள் பலா் போக்குவரத்து நெரிசல்களில் சிக்கிக்கொண்டனா். இதனால் அவா்களால் குறித்த நேரத்திற்கு சென்னை விமானநிலையத்தை வந்தடைய முடியவில்லை. பயணிகள் மட்டுமின்றி, விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள்,விமான பணிப்பெண்கள்,விமான பொறியாளா்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப வல்லுனா்கள் ஆகியோா் வந்த வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டன.
இதைப்போன்று ஏராளமான விமான பயணிகள், விமானிகள், ஊழியா்கள் சென்னை விமானநிலையத்தை வந்தடைய தாமதம் ஆனதால், சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய உள்நாட்டு மற்றும் சா்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
நேற்று இரவு 7 மணியிலிருந்து இன்று அதிகாலை 1.30 மணி வரை 20 விமானங்கள் சுமாா் ஒரு மணி நேரத்திலிருந்து 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.சென்னையிலிருந்து இலங்கை செல்லும் 4 விமானங்கள், துபாய், சிங்கப்பூா், ஹாங்காங் ஆகிய 7 சா்வதேச விமானங்களும், தில்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூா், திருவனந்தபுரம், புவனேஸ்வா், கோவை உள்ளிட்ட 13 உள்நாட்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன.ஆனால், சென்னைக்கு வரவேண்டிய விமானங்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வழக்கம்போல் இயங்கின.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu