திமுக ஆட்சிக்கு வந்த பின் 8.82 லட்சம் பேருக்கு புதிதாக குடும்ப அட்டைகள்: அமைச்சர்
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி.
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை மற்றும் உணவுத் துறைகள் சார்பில் தொகுதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், சக்கரபாணி மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினர்.
இந்நிகழ்வில் குடும்ப அட்டை வழங்குதல், முதியோர், மாற்றுத் திறனாளிகள், விதவை பெண்கள் 100 பேருக்கு உதவித்தொகைக்கான ஆணையும், திருநங்கைகள் உட்பட 119 பேருக்கு குடும்ப அட்டையும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தமிழக முதல்வர் பொறுப்பேற்ற நாள் முதல் இன்றுவரை கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒரே முதல்வர் நம் முதல்வர்.
மேலும் மற்ற சட்டமன்ற தொகுதிகளில் தடுப்பூசி தட்டுபாடு ஏற்பட்ட போது கூட, சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை செய்தவர் உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதி ஸ்டாலினிடம் உங்கள் தொகுதியின் மனுவை கொடுத்தால் கண்டிப்பாக தீர்வு காணப்படும் என அவரது செயல்பாட்டை கூறினார்.
இவரைத் தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், முதியோர் உதவி தொகை திட்டம் கலைஞரால் துவங்கப்பட்டது.
மழை வெள்ள சேதம் ஏற்பட்ட போது முதன்முதல் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு வெள்ளத்தில் இறங்கி பணிகளில் ஈடுபட்டவர் முதல்வர் ஸ்டாலின் தான் என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, இந்த சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் செல்லப்பிள்ளை உதயநிதி ஸ்டாலின். தமிழக முதல்வர் மே 7 ம் தேதி பொறுப்பேற்றதில் இருந்து சிறப்பாக செயல்பட்டு, அனைவராலும் இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சர் என்ற பெருமை பெற்றுள்ளார். ஆட்சி பொறுப்பேற்றது முதல் இருந்து இந்த தொகுதியில் மட்டும் 2757 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் உணவுத்துறை துறை மூலம் ஆட்சி பொறுப்பேற்றது முதல் 8 லட்சத்து 82,000 குடும்ப அட்டைகள் வழங்க பட்டுள்ளது.
முதல்வரை போலவே சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுதும் சுற்று பயணம் மேற்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
மேலூம் வருகின்ற பொங்கல் திருநாளுக்கு தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு 2 கோடியே 15 லட்சம் பேருக்கு 21 வகையான பொருட்கள் வழங்கப்பட உள்ளது என்றார்.
வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் பேசுகையில், உதயநிதி ஸ்டாலின் ஒட்டுமொத்த தமிழகத்தின் செல்ல பிள்ளை அனைத்து தொகுதிகளில் உள்ள எல்லோருக்கும் ஒரு முன்னோடியாகவும், அமைச்சர்கள் பலர் பார்த்து ஆச்சரிய படும் அளவிற்கு செயல்பட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். தமிழகம் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியால் தற்போது தமிழகம் நிம்மதியாக இருக்கிறது.
தமிழகத்தில் 1,00,000 கும் மேற்பட்டோர்ரக்கு முதியோர்உதவித்தொகை வழங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின் முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஓடி ஓடி பணி செய்வதை கண்டு அமைச்சர்கள் அனைவரும் அதேபோல ஓடி ஓடி பணி செய்து வருகின்றனர்.
இன்னும் 50 ஆண்டு காலம் திமுக நிலையான மற்றும் வலிமையான ஒரு கட்சியாக இருக்கும். தம்பி உதயாவை எதிர்த்து அடுத்த தேர்தலில் யாரும் போட்டி போடவே கூடாது என்கிற அளவிற்கு அவர் தொகுதியில் மட்டும் அல்ல தமிழகம் முழுவதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என பெருமிதத்துடன் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu