சென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு, புதிய அறிவப்பு

சென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு, புதிய அறிவப்பு
X

சென்னை விமான நிலையம் பைல் படம்

செனனை விமான நிலையம், உள்நாட்டிற்கு இடையே பயணம் செய்யும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை தளர்வு செய்து, புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னையிலிருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரம்,கொச்சி,கோழிக்கோடு,கண்ணூா் மற்றும் மகராஷ்டிரா மாநிலம் மும்பை,புனே,அவுரங்கபாத் ஆகிய நகா்களுக்கு விமானங்களில் பயணிப்பவா்கள் RT-PCR நெகடீவ் சான்றிதழ்களுடன் தான் பயணிக்க முடியும் என்ற கட்டுப்பாடு ஏற்கனவே அமுலில் உள்ளது.ஆனால் தற்போது தளா்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் 2 டோஸ்கள் போட்டவா்கள்,அதற்கான சான்றிதழ்களுடன் சென்னையிலிருந்து,கேரளா,மகராஷ்டிரா மாநிலங்களுக்கு விமானங்களில் பயணிக்கலாம்.அவா்களுக்கு RT-PCR நெகடீவ் சான்றிதழ்கள் தேவையில்லை.

ஆனால் 2 டோஸ் தடுப்பூசிகள் போடாதவா்கள்,பயண நேரத்திலிருந்து 72 மணிக்குள் எடுக்கப்பட்ட RT-PCR நெகடீவ் சான்றிதழ்களுடனே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனா்

இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் உத்தரவுபடி,இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளனா்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!