/* */

தமிழகத்தில் மின்தடை இனியும் தொடருமா? அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது என்று, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் மின்தடை இனியும் தொடருமா? அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
X

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், மின் விநியோகம் மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: தமிழகத்தில் இனி மின்தடை உறுதியாக இருக்காது. மாதாந்திர பராமரிப்புப்பணிகள் மட்டுமே நடைபெறும். மின்தடை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பொத்தாம் பொதுவாக புகார்களை பதிவிடக் கூடாது.

புகார்களை, மின் இணைப்பு எண்ணுடன் குறிப்பிட வேண்டும். மேலும் மின் கட்டணம் அதிகமாக உள்ளதாக புகார்கள் வந்ததால், மின்சாரத்துறையின் சார்பில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் தவறுகள் இருக்கும் பட்சத்தில், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 29 Jun 2021 10:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு