கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைக்கே நிவாரண நிதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்தவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளிக்கிறார். உடன் அமைச்சர் சேகர்பாப, உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, தயாநிதிமாறன் எம்பி ஆகியோர் உள்ளனர்.
சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் எம்.பி ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக ஆக்ஸிஜனுடன் கூடிய 70,000 படுக்கைகள் தற்போது காலியாக உள்ளது. அதில் திருவல்லிக்கேணி பகுதியில் சுமார் 200 ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள் உள்ளது.
தனியார் நிறுவனமும், தமிழக அரசும் இணைந்து ஐந்து இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க உள்ளது. முதலாவதாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒன்றரை கோடி ரூபாயில் துவங்கப்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தில் ஒரு மனி நேரத்தில் 1000லிட்டர் உற்பத்தி செய்யப்படும்.
இதுவரை 1736 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தமிழகத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு நடவடிக்கைக்காக 13 மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு தமிழக முதல்வர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோய்க்கான தடுப்பு நடவடிக்கை மற்றும் மாற்று மருந்து குறித்தும் என்னென்ன நடவடிக்கைகள் மேலும் அதிகப்படுத்தலாம் என இக்குழு கண்டறிந்து முதல்வரிடம் அறிக்கை அளிக்கும்.
தமிழகத்தின் மூன்றாம் அலைவந்தால் அது பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கும் என்று கருத்து நிலவிவருகிறது. ஆனால் எந்தவொரு நிலை வந்தாலும் அதை சமாளிப்பதற்கு சுகாதாரத்துறையும், தமிழக அரசும் தயார் நிலையில் உள்ளது. கொரோனா தொற்றினால் தாய், தந்தை இருவரும் இறந்தால் மட்டுமே அவர்களின் குழந்தை ஆதரவற்றவர்கள் என கருத முடியும். அதன்பிறகே அந்த குழந்தைக்கு முதல்வர் அறிவித்த கொரோனா நிவாரணநிதி கிடைக்கும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu