சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா

சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா
X

சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி மாதப் பெருவிழா, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 3ம் நாள் அதிகார நந்தி சேவையும், ஏழாம் நாள் தேர்த் திருவிழாவும் நடந்தது.விழாவின் பிரதான நாளான நேற்று, அறுபத்து மூவர் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு காலை, திருஞான சம்பந்தர் எழுந்தருளல், என்பை பூம்பாவையாக்கி அருளல் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிய கபாலீஸ்வரர், கோபுர தரிசனம் கொடுத்து, 63 நாயன்மார்களுடன் காட்சியளித்தார்.

பின், வெள்ளித் தேரில் கபாலீஸ்வரர் முன் செல்ல, 63 நாயன்மார்களும் பின்தொடர்ந்தனர்.இதில், மயிலாப்பூரைச் சேர்ந்த பிரதான கோவில்களின் உற்சவ மூர்த்திகளும் பங்கேற்றனர். இரவு, சந்திரசேகரர் பார்வை வேட்டை விழாவும், ஐந்திரு மேனிகள் விழாவும் நடந்தது.இம்முறை கொரோனா தொற்று காரணமாக அன்னதானத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!