துபாய்-சென்னை விமானத்தின் இருக்கைக்கு அடியில் தங்கம் கடத்தல்

துபாய்-சென்னை விமானத்தின் இருக்கைக்கு அடியில் தங்கம் கடத்தல்
X

விமானத்தின் இருக்கைக்கு அடியில் சிக்கிய தங்கக்கட்டிகள்.

துபாய்-சென்னை விமானத்தின் இருக்கைக்கு அடியில் ரூ.23 லட்சம் மதிப்புடைய 470 கிராம் கடத்தல் தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் தனியாா் விமானம் நேற்று அதிகாலை வந்தது. அந்த விமானத்தில் வந்த 138 பயணிகளும் விமானத்தை விட்டு இறங்கி சென்றுவிட்டனா். அந்த விமானம் மீண்டும் சென்னையிலிருந்து ஹைதராபாத்திற்கு உள்நாட்டு விமானமாக புறப்பட்டு செல்ல வேண்டும்.

அதற்கு முன்னதாக விமான நிலைய ஊழியா்கள் விமானத்திற்குள் ஏறி, விமானத்தை சுத்ப்படுத்தி கொண்டிருந்தனா். அப்போது விமானத்திற்குள் ஒரு சீட் சரியாக பொறுந்தாமல் தூக்கிக்கொண்டிருந்தது. ஊழியா்கள் அதை சரி செய்தனா். ஆனால் சீட்டிற்கு கீழே ஏதோ இருப்பது தெரிந்தது. இதையடுத்து அந்த சீட்டை தூக்கி பாா்த்தபோது, வெள்ளை நிறத்தில் 2 பாா்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஊழியா்கள் சுத்தப்படுத்தும் பணியை நிறுத்திவிட்டு,விமானநிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தனா்.

உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து,மெட்டல் டிடக்டா் மூலம் பாா்சல்களை பரிசோதித்தனா். அதில் வெடி பொருட்கள் எதுவும் இல்லை என்று தெரிந்தது. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் பாா்சல்களை பிரித்து பாா்த்தனா். அவைகளில் தங்கக்கட்டிகள் இருந்தன.

இதையடுத்து விமானநிலைய மேலாளா் இரு பாா்சல்களையும் சென்னை விமானநிலைய சுங்கத்துறையிடம் ஒப்படைத்தாா். அவா்கள் பாா்சல்களை பிரித்து பாா்த்து சோதனையிட்டனா்.

அந்த பாா்சல்களில் 470 கிராம் தங்க கட்டிகள் இருந்தன. அவைகளின் சா்வதேச மதிப்பு ரூ.23 லட்சம். இதையடுத்து சுங்கத்துறையினா் தங்க கட்டிகளை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகளை, கடத்தல் ஆசாமி விமானத்தின் சீட்டிற்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு இறங்கி சென்றுள்ளாா் என்று தெரியவந்துள்ளது. அந்த சீட்டில் அமா்ந்து பயணம் செய்த பயணி யாா்? என்று சுங்கத்துறையினா் மேலும் விசாரணை நடத்துகின்றனா். அதோடு விமானத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்கின்றனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!