பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆப் தரவரிசை இன்று வெளியீடு
தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான பொறியியல் கல்லுாரிகளிள் மாணவர் சேர்க்கை, கடந்த ஜூலை 26ம் தேதி ஆன்லைன் மூலமாக நடந்தது. அதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஆகஸ்ட் 27 தேதி நிறைவடைந்தது. நடப்பாண்டில் கொரோனா காரணமாக நேரடி முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறாத காரணத்தால், மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதி சான்றிதழ்களை இணையதளம் மூலமாக சமர்ப்பித்தனர். இதையடுத்து செப்டம்பர் 17ம் தேதி முதல் ஒற்றை சாளர ஆன்லைன் பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடக்க உள்ளது.
இந்த நிலையில், மாணவர்களின் 12 ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் கட்-ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு, மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. தரவரிசைப் பட்டியல் உடன் சேர்த்து மாணவர்களின் ஜாதி வாரியான மற்றும் சிறப்புத் தகுதி ஒதுக்கீடுகள் அடிப்படையில் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
எந்த கட்-ஆப் மாணவர்கள் எந்த நாளில் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் இன்று அறிவிக்கப்படும். http://tneaonline.org என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியலை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu