அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
முதல்வர் ஸ்டாலின் மதுசூதனன் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் அவர்கள் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது உடல் சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இணை ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை 8 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் மதுசூதனன் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதனை தொடர்ந்து பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும் முதல்வர் ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்தனர். அவரும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார். பின்னர் 3 பேரும் அருகருகே அமர்ந்து இருந்தனர். சில நிமிடங்கள் கழித்து முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu