கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின்- எம்பி கனிமொழி மலர்தூவி மரியாதை

கருணாநிதி  நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின்- எம்பி கனிமொழி மலர்தூவி மரியாதை
X
தமிழக முதல்வர் நின்று மக்களோடு மக்களாக நின்று மக்களின் துயர் துடைத்து இன்புற்று வாழ அனைத்து பணிகளையும் மேற்கொள்வார்.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: 2022ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நிறைவோடு வரவேற்கிறது.இந்த ஆண்டு எல்லா நலமும் வளமும் பெற்று மக்கள் சுபிக்க்ஷமாக வாழ்வதற்கு தமிழக முதலமைச்சர் அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுப்பார்.

அதற்கு உதாரணம் இறையன்பர்கள் மகிழ்ச்சியோடு இன்று காலை 12.01இல் இருந்து சுவாமியை அவர்கள் எப்பொழுது தரிசனம் எப்படி செய்து கொண்டிருந்தார்களோ அதேபோல் மகிழ்ச்சியோடு மகிழ்ச்சி கடலில் தரிசித்து கொண்டு இருக்கிறார்கள்.எல்லாம் வல்ல இறைவன் இந்த ஆண்டு தமிழகத்தை சுபிட்சமாக காப்பற்றுவார்கள் களத்தில் தமிழக முதல்வர் நின்று மக்களோடு மக்களாக நின்று மக்களின் துயர் துடைத்து இன்புற்று வாழ அனைத்து பணிகளையும் மேற்கொள்வார்.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!