சோனியா மற்றும் ராகுல் காந்தியை இல்லத்தில் சந்தித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்

சோனியா மற்றும் ராகுல் காந்தியை இல்லத்தில் சந்தித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்
X

டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று பிரதமரை சந்தித்து கோரிக்கைகளை அளித்து பேசிய நிலையில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக பிரதமரை சந்திக்க செல்லவில்லை, தொற்று குறைந்த நிலையில் பிரதமரை சந்திக்க அனுமதி கிடைத்ததால் முதன்முறையாக மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை நேற்று சந்தித்தார்.

அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், உதவியாளர் தினேஷ், தனிச் செயலர்கள் உதயச்சந்திரன், உமாநாத், செல்வராஜ் உள்ளிட்டோர் சென்றனர். ஸ்டாலின் இன்று காலை 10 மணி அளவில் சோனியாவின் இல்லத்துக்கு சென்றார். அவருடன் அவரது மனைவி துர்காவும் உடன் சென்றனர். அவர்கள் இருவரையும் சோனியாவும், ராகுலும் வரவேற்றனர். சோனியாவுக்கு புத்தகம் ஒன்றை ஸ்டாலின் பரிசளித்தார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்