சென்னை: அர்ச்சகர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை: உதயநிதி எம்எல்ஏ வழங்கினார்!

சென்னை: அர்ச்சகர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை: உதயநிதி எம்எல்ஏ வழங்கினார்!
X

அர்ச்சகர்ளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகைய உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்கினார். உடன் அமைச்சர் சேகர் பாபு உள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அர்ச்சகர்களுக்கு ரூ.4ஆயிரம் உதவித்தொகையை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் திருக்கோவிலில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாசாரியார்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கினார். விழாவில் சுமார் 210 பயனாளிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 13 வகை மளிகை பொருட்களை திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

விழாவில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன் இ.ஆ.ப ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சி.ஹரிப்ரியா, த.காவேரி. ரேணுகா தேவி, உதவி ஆணையர் க.வெனிதா மற்றும் துறை செயல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!