சென்னை எம்.ஐ.டி. கல்லூரியில் 66 மாணவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு

சென்னை எம்.ஐ.டி. கல்லூரி.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி மாணவர்கள் 80பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.அதில் 50 பேருக்கு எஸ் ஜீன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு ஒமிக்ரான் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.மேலும் கரோனா உறுதி செய்யப்பட்ட 80 மாணவர்களும் எம்ஐடி விடுதி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில்
சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரி விடுதியில் தங்கியிருந்த 1659 மாணவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதில் 40 மாணவர்கள் வீட்டில் தனிமை தனிமைப்படுத்திக் கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 41 பேர் விடுதியில் தங்க வைக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.இதில் 39 மாணவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அனைத்து மாணவர்களும் நலமுடன் உள்ளனர். விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நெகட்டிவ் ரசில்ட் வந்தவுடன் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இன்னும் 262 மாணவர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.66 மாணவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்புகள் அதிகரித்தால் தேர்வு தேதிகள் ஒத்திவைக்கப்படும். பிறகு அதற்கான தேதி அறிவிக்கப்படும்.
அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீறி கல்லூரிகள் நடத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறுகையில்
கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது இன்று 5 ஆயிரத்தை தாண்டும். மக்கள் பயப்படத் தேவையில்லை.இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளலாம்
உடல்நலத்தில் அதிக பாதிப்பு மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லாதவர்கள் சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை பெறலாம். சென்னையில் 30 இடங்களில் கரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
டெல்டா வகை மற்றும் ஒமிக்ரான் இரண்டும் கலந்து சுனாமி போல் பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 78 சதவீதம் பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu